Skip to main content

வரும் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் "பிக் பாஸ்: சீசன் 3" ஆரம்பம்!

 "பிக் பாஸ் - 3"!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது மீண்டும் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை இரண்டு சீசன்கள் முடிந்து விட்டது.

கடந்த 2017-ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அறிமுகமானது பிக்பாஸ்.

அடுத்தது மூன்றாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கு முன் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 1, சீசன் 2, என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்த இரண்டையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இது மாபெரும் வெற்றியைப் பெற்றது. 

biggboss1

தற்போது "பிக்பாஸ் சீசன் 3" நிகழ்ச்சியின் ஷூட்டிங் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்ன போட்டி?

ஒரே வீட்டுக்குள் 100 நாட்கள் 16 போட்டியாளர்கள் தங்கியிருந்து வெளி உலக தொடர்புகளின்றி,  பிக்பாஸ் கொடுக்கும் போட்டிகளை செய்ய வேண்டும். இதற்கு சில விதிமுறைகளும் விதிக்கப்படும்.

கடந்த 2017-ம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஓவியா, சினேகன் உள்ளிட்டோர் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றனர்.

 "பிக் பாஸ் - 3"!

இதையடுத்து 2018-ம் ஆண்டில் இரண்டாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கியிருந்தார்.

ஆனால், நடிகர் கமல்ஹாசன் அரசியல்வாதியாக மாறி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். யாஷிகா, ஐஸ்வர்யா, மஹத் என இளசுகள் பட்டாளங்கள் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் நடிகை ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இருப்பினும் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் சீசனுக்கு கிடைக்கவில்லை. 

 "பிக் பாஸ் - 3"!

தற்போது பிக்பாஸ் சீசன் 3 துவங்க உள்ளது.

அதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு புரமொஷன் வீடியோக்களை படப்பிடிப்பு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் நிகழ்ச்சிக் குழுவினர்.

இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகலாம் என தெரிய வருகிறது.

ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Its Official: KamalHaasan All Set To Host BiggBoss Tamil 3

​    biggboss2

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.