Skip to main content

வரும் 2023 ஆம் ஆண்டிற்குள் தனது 7 ஆயிரம் ஊழியர்களை நீக்கும் வோக்ஸ்வாகன்

volkswagen

ஜெர்மன் கார் நிறுவனமான வோக்ஸ்வாகன் வரும் 2023 ஆம் ஆண்டிற்குள் தனது 7 ஆயிரம் ஊழியர்களை நீக்கப் போவதாக அறிவித்துள்ளது.

தற்போது வோக்ஸ்வாகன் எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. 

volkswagen

இதுகுறித்து வோக்ஸ்வாகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கார் தயாரிப்பில் மாற்றங்களை விரைவாக கொண்டு வருவோம்.

இந்த ஆண்டுக்குள் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சந்தையில் வோக்ஸ்வாகனின் விற்பனையை அதிகப்படுத்துவதற்கு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன'' என்று கூறப்பட்டுள்ளது. 

இதனால் சுமார் 11 ஆயிரம் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த நடவடிக்கை மூலம் ஆண்டுக்கு 5.9 பில்லியன் யூரோ அளவுக்கு அந்த நிறுவனம் மிச்சம் செய்ய முடியும். 

volkswagen

ஊழியர்களை குறைப்பு செய்தாலும், வருங்காலத்தில் பேட்டரி ரக கார்கள்தான் முக்கிய ரோலாக ஆட்டோ மொபைல் துறையில் இருக்கும் என வோக்ஸ்வாகன் கணித்துள்ளது.

இதனால் சுமார் 19 பில்லியன் யூரோ வரைக்கும் அதற்காக செலவிட தயாராகியுள்ளது. 

Volkswagen brand to cut up to 7,000 jobs in new savings drive

volkswagen

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.