Skip to main content

வரலாற்றில் நான்காவது வெப்பமான ஆண்டு 2018: ஐக்கிய நாடுகள்

KERALA FLOOD

கடந்த 2018 ஆம் ஆண்டு நான்காவது வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது, மேலும் பூமிக்கு ஆபத்தானது என பெரும்பாலான அரசாங்கங்கள் கருதுகின்ற அளவிற்கு அதிக வெப்பம் 1 டிகிரி (1.8 degree Fahrenheit) செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் வானிலை மாற்றங்கள் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியது, கலிபோர்னியா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் காட்டு தீ, தென் ஆப்பிரிக்காவில் வறட்சி மற்றும் கேரளாவின் வெள்ளம் ஆகியவை இந்த தாக்கத்தில் அடங்கும்.

மனிதனால் உருவாகும் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகள், முக்கியமாக எரியும் புதைபடிவ எரிபொருட்களில் இருந்து வெளியேறும் வாயுக்கள் சுற்றுசூழலில் அதிக வெப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உலகளாவிய மேற்பரப்பு வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் (1.8 டிகிரி பாரன்ஹீட்) ஆக இருந்தது என அமெரிக்க, பிரிட்டன், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய வானிலை நிலையங்களின் தரவை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகளின் உலக வானியல் அமைப்பு (WMO) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புவி வெப்பமயமாதலை எதிர்ப்பதற்கு கிட்டத்தட்ட 200 அரசுகள் பாரிசில் காலநிலை உடன்படிக்கை 2015 ஆம் ஆண்டில் பாசிச எரிபொருட்களை பயன்படுத்துவதை நிறுத்த, வெப்பநிலையில் 2 டிகிரி செல்சியஸ் (3.6 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை குறைக்க கையெழுத்திட்டனர்.

கடந்த ஆண்டு, அமெரிக்கா மட்டும் 14 வானிலை மற்றும் காலநிலை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டது, ஒவ்வொரு பாதிப்பும் $ 1 பில்லியன் மதிப்பிற்கும் அதிகமான சேதத்தை ஏற்படுத்தியது, புயல் மற்றும் காட்டுத்தீ அதில் முக்கிய பங்குவகிக்கிறது என அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) கூறியுள்ளது.

2018 Was the Fourth Warmest Year on Record With Kerala and California at the Receiving End

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.