Skip to main content

வங்கதேசத்தில் கால்வாய்க்குள் ரயில் விழுந்து விபத்து ‍- ஐந்து பேர் பலி!

Bangladesh train accident

வங்கதேசம் நாட்டின் வடகிழக்கு பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் கால்வாய்க்குள் விழுந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் இருந்து வடகிழக்கு பகுதியில் உள்ள சில்ஹெட் நகரை நோக்கி உப்பாபன் எக்ஸ்பிரஸ் ரயில் (June 23) புறப்பட்டு சென்றது.

அப்போது நள்ளிரவு சுமார் 12 மணியளவில் மவுல்விபஜார் பகுதியை நெருங்கிய ரயில் குலாவ்ரா என்ற இடத்தில் உள்ள போரோம்சால் பாலத்தை கடந்த போது எதிர்பாராத விதமாக பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

Bangladesh train accident

உப்பாபன் எக்ஸ்பிரஸ் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம்புரண்டு கீழே விழுந்தன. அவற்றில் இரு பெட்டிகள் கால்வாய்க்குள் விழுந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் சுமார் 100 காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

At Least 4 Dead in Bangladesh After Train Veers Off Bridge

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.