Skip to main content

வங்காள விரிகுடாவில் காற்றழுத்தம் - தென்தமிழகத்திற்கு மழை வாய்ப்பு!

வானிலை

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனினும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து கொண்டு இருக்கிறது.
 
இந்நிலையில் தமிழகத்தை நோக்கி வரும் வாரத்தில் புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மழை தொடர வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும்.

அது அங்கிருந்து நகர்ந்து வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி பிற்பகலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இலங்கை நோக்கி நகரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்பின்னர், இலங்கை வழியாக தமிழத்தை நோக்கி புயலாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

மழை தொடர வாய்ப்பு!

தற்போதையை நிலைப்படி தமிழகத்தை நோக்கியும், மியான்மர் பகுதியை நோக்கியும் 2 சூழல்களில் அதன் போக்கு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு பிறகு தான் அதன் நிலைப்பாடு குறித்து உறுதியாக சொல்ல முடியும். தமிழகத்தை நோக்கி புயல் வந்தால், தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

rain

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று), காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Depression formed in Bay of Bengal may intensify in upcoming week and get transformed into the First Cyclone of the season.

rain

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.