Skip to main content

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - மழை தொடர வாய்ப்பு!

மழை தொடர வாய்ப்பு!

கோடை காலம் தொடங்கியதையொட்டி தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் ஆதாரங்கள் வற்றி வருவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உண்டாகியுள்ளது.

இந்நிலையில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு முன்பாக நல்ல மழை பெய்தது.

குறிப்பாக சென்னையில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது.

கன்னியாகுமரி வங்க கடல் பகுதியில் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காணப்படுகிறது.

மழை தொடர வாய்ப்பு!

சூறைக் காற்றுடன் மழை

இதேபோன்று வெப்பச்சலனமும் நிலவுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் சூறைக் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் உதகையில் 4 செ.மீ. மழையும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 3 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது.

திருச்சி, வேலூர், நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The Indian Metrological Department forecasts rain accompanied by heavy winds in Tamil Nadu today

மழை தொடர வாய்ப்பு!

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.