Skip to main content

வனிதாவின் மகள் தனது தந்தையைப் பற்றி கூறும் அதிர்ச்சி தகவல்!

வனிதா விஜயகுமார்

“பிக்பாஸ் தமிழ் மூணாவது சீசனில் போட்டியாளராக இருக்கும் வனிதா விஜயகுமார் மீது மகளை கடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் வனிதாவை, பிக்பாஸ் அரங்கிற்குள்ளேயே நுழைந்து தெலுங்கானா காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

வனிதா கடந்த 2000 ஆம் ஆண்டில் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீ ஹரி மற்றும் ஜோவிகா என இருக்குழந்தைகள் உள்ளனர்.

இதையடுத்து, ஆகாஷை விவாகரத்து செய்துவிட்டு, தொழிலதிபரான ஆனந்தராஜ் என்பவரை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜெயந்திகா என்ற ஒரு மகள் இருக்கிறார்.

இந்த நிலையில், வனிதா மற்றும் ஆனந்தராஜ் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2012 ஆம் ஆண்டு பரஸ்பரம் விவாகரத்து செய்து கொண்டனர். 

​    ​vanitha

அதன் பிறகு ஆனந்தராஜூடன் தான் குழந்தை ஜெயந்திகா வசித்து வருகிறார். 

இவர்கள் ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர். 

அப்படியிருக்கும் போது வனிதா ஜெயந்திகாவை சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார். 

அதன்பிறகு தான், பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கிறார். இதையடுத்து, தனது மகளை வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா காவல் நிலையத்தில் ஆனந்தராஜ் புகார் அளித்தார்.

ஆனந்தராஜ் கொடுத்த புகாரைத் தொடர்ந்து வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

vanitha daughter

ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் காவல்துறையினர் தேடிக் கொண்டிருக்க, தமிழ் பிக்பாஸ் ஷோவில் வனிதா இருப்பதை அறிந்த ஆனந்த்ராஜூ, காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகிலுள்ள நசரத்பேட்டை பகுதியில் பிவிஆர் பிலிம்சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிக் பாஸ் 3 வீட்டுக்கு, நசரத்பேட்டை காவல் உதவியுடன் தெலங்கானா காவல்துறையினர் விரைந்தனர். 

இதைத் தொடர்ந்து, நேற்று காலை 10 மணி முதல் வனிதாவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். வனிதா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை காவல் துறையினர் கைது செய்யவில்லை.

vanitha

இந்நிலையில், வனிதாவின் மகள் ஜெயந்திகாவிடம் மகளிர் உரிமை ஆணைய துணைத் தலைவர் வசுந்தரா நேற்று மாலை வாக்குமூலம் பெற்றார். 

அதில், தாய் வனிதாவுடன் செல்ல விரும்புவதாக ஜெயந்திகா வாக்குமூலம் அளித்திருப்பதாக காவல்துறையினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், கைது நடவடிக்கையில் இருந்து வனிதா தப்பியுள்ளார்.

Shocking revelation of Vanitha's daughter about her father

vanitha

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.