Skip to main content

விடுப்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மே 19 ஆம் தேதியில் இடைத்தேர்தல் !

bypoll

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

ஆயினும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

ஆனால் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி ஆனது.

இந்நிலையில்,  திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று ஏப்ரல் 9 ஆம் தேதி அறிவித்துள்ளது.

bypolls

இந்த நான்கு விடுபட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பங்கேற்க ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் செய்யலாம், வேட்பு மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 29 ஆம் தேதி இறுதி நாள் ஆகும், 30-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நிறைவடைகிறது.

மே 2 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும்.

மேற்கண்ட நான்கு தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை பாராளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தின் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளுடன் சேர்த்து மே 23-ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Election Commission announced the By-Polls For 4 Vacant assembly seats in Tamilnadu to be held on May 19 and vote counting is on May 23.

election

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.