Skip to main content

விதைப்பந்துகளின் மூலம் காடுகளையே உருவாக்கலாம்

விதைப்பந்து உருவாக்குவது எப்படி?

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் இயற்கை மற்றும் விவசாயத்தின் பக்கம் அதிகமாக திரும்பியிருக்கின்றனர். அவ்வகையில், வேளாண்துறையின் புதிய திருப்பமாக விதைப்பந்துகளின் மூலம் மரங்களை உருவாக்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து வருகிறது. 

விதைப்பந்து செய்ய தேவையான பொருட்கள்

வளமான மண், மாட்டு சாணம், சிறு தானிய விதைகள் 

விதைப்பந்து உருவாக்குவது எப்படி?

இந்த மூன்று பொருட்களையும், அதாவது, 5 பங்கு மண் கலவை, 3 பங்கு மாட்டுச் சாணம், 1 பங்கு சிறுதானிய விதைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இக்கலவையை சேர்க்கப்படும் மண், வயல்களில் இருக்கும் மேல்மண்ணாக இருத்தல் மிகவும் நல்லது. மேலும், ஆடு மற்றும் மாடுகளின் சானத்தையே எருவாக பயன்படுத்தலாம். சிறுதானிய விதையாக கம்பு, கேழ்வரகு,சாமை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

மூன்றையும் நன்றாக கலந்து நீர் சேர்த்து மாவு போன்று பிசைந்து சிறு உருண்டைகளாக செய்து அதன் நடுவில் துளையிட்டு, நம்மிடம் உள்ள விதைகளை வைத்து மீண்டும் உருண்டையாக செய்து சிறிது நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். பின்பு, வெயிலில் காய வைத்தால் விதைப்பந்து தயார். ஈரப்பதத்துடன் நேரடியாக வெயில் காயவைத்தல் விதைப்பந்தில் விரிசல் ஏற்பட்டு விடும்.

இவ்வாறு தயார் செய்த விதைப்பந்துகளை தரிசு நிலங்களில், சாலை ஓரங்களில் வீச வேண்டும். உருண்டையில் உள்ள மண் வேர்கள் வலுவாக மண்ணில் நிலைக்க உதவும். எனவே, காடுகளை உருவாக்குவதற்கு விதைப்பந்து முறை சரியான தீர்வாக அமையும்.

By using the seedballs, we can create a forest..How to make Seedballs?

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.