Skip to main content

"விஸ்வாசம்" படப்பிடிப்பு முடிந்த நிலையில் ‍மாணவர்களுடன் மீண்டும் கைகோர்த்த அஜித்

"விஸ்வாசம்" படப்பிடிப்பு முடிந்த நிலையில் ‍மாணவர்களுடன் மீண்டும் கைகோர்த்த அஜித்

ஆஸ்திரேலியாவில் நடந்த UAE மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலன்ஞ் போட்டியில் நடிகர் அஜித் ஆலோசகராக பணியாற்றிய  ‘தக்‌ஷா குழு’ இரண்டாம் இடத்தை வெற்றி பெற்றது. இந்நிகழ்வின் போது நடிகர் அஜித் விஸ்வாசம் படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்ஐடி கேம்பஸில் பயிலும் ஏரோநாட்டிகல் மாணவர்கள், ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய ’தக்‌ஷா’ என்னும் குழுவை உருவாக்கினர். இந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 

இதையடுத்து அஜித் பயிற்சியளித்த தக்‌ஷா குழுவினர், அதிக நேரம் வானில் பறக்கக்கூடிய ஆளில்லா விமானத்திற்கான போட்டியில் கல்லூரி அளவில் முதல் இடத்தைப் பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்த UAE மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலன்ஞ் போட்டியிலும் ‘தக்‌ஷா குழு’ இரண்டாம் இடத்தை வெற்றி பெற்றது.

 

"விஸ்வாசம்" படப்பிடிப்பு முடிந்த நிலையில் ‍மாணவர்களுடன் மீண்டும் கைகோர்த்த அஜித்

 

இந்நிகழ்வின் போது நடிகர் அஜித் விஸ்வாசம் படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. 

இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படப்பிடிப்பை முடித்திருக்கும் அஜித், தக்‌ஷா குழுவின் அடுத்த ட்ரோன் திட்டத்துக்காக எம்ஐடி கல்லூரிக்கு வந்துள்ளார்.

கடந்த வாரம் அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. சிறுத்தை  சிவா இயக்கிய இப்படத்தில், நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார், இப்படம் வரும் பொங்கல் விடுமுறையில் திரைக்கு வர உள்ளது. 

இந்த பயிற்சியில் மாணவர்களுடன் அஜித் இருக்கும் புகைப்படங்களும், அவர் ஆளில்லா விமானத்தை இயக்கும் வீடியோக்களும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Actor Ajith rejoins MIT Drone Mission after the completion of shooting of viswasam
 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.