Skip to main content

விரல் நுனியில் வேளாண் தகவல்களைத் தரும் உழவன் செயலி !!!

உழவன் செயலி

உழவன் செல்லிடப்பேசி செயலியில் விரல் நுனியில் வேளாண் தகவல்கள் கிடைப்பதால், இந்த செயலி விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இது தொடர்பாக வேளாண் துறை இயக்குனர் பாலசுப்ரமணியம் கூறுகையில், அண்மையில் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட உழவன் செயலி, தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் உள்ளது. இதற்கு, ஸ்மார்ட் போனும், இணைய வசதியும் இருந்தால் போதும். கூகுள் பிளே ஸ்டோரில் சென்று உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலி மூலம் விவசாயிகள் எல்லா தகவல்களையும் வீட்டில் இருந்தபடியே எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

உழவன் செயலியின் சிறப்பம்சங்கள் 
 

இந்த செயலியில் மானியத் திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிர்க் காப்பீடு விவரம், உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு நிலை, வேளாண் இயந்திரம் வாடகை மையம், சந்தை விலை நிலவரம், வானிலை முன் அறிவிப்பு, உதவி வேளாண் அதிகாரி வருகை ஆகிய 9 வகையான வசதிகள் இடம் பெற்றுள்ளன.

இதில், விதைகள், பண்ணை இயந்திரங்கள், சூரிய சக்தி விசை பம்ப், நிழல் வலை குடில், பசுமை குடில், சிப்பம் காட்டும் அறை, உயர்தர நாற்றங்கால், புதிய திசு வளர்ப்புக் கூடம், தேனீ பேட்டிகள், முன்குளிர்விப்பு அறை, குளிரூட்டப்பட்ட வாகனம், நகரும் விற்பனை வண்டி, வெங்காய சேமிப்பு கிடங்கு போன்ற பல அமைப்புகள் உள்ளன. மேலும், இதற்காக எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு பகுதியைச் சேர்ந்த விவசாயி தான் வசிக்கும் பகுதியை குறிப்பிட்டு அங்கு என்னென்ன பொருள்கள் மானியத்தில் வழங்கப்படுகின்றன என்பதை அறிந்து அதை எளிதில் பெற முடியும்.

உரம், விதை, பூச்சிமருந்து உள்ளிட்ட இடுபொருட்கள், வேளாண் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றுக்காக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மாவட்ட வாரியாக சந்தைகளில் வேளாண் பொருள்களின் விலை குறித்து அறிந்துகொள்ள முடியும். இதன்மூலம், விலையேறும் நேரங்களில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்று அதிக லாபம் பெற முடியும்.

இதேபோல், ஒவ்வொரு விவசாயியும் தங்கள் பகுதியின் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன் அறிவிப்பையும் தெரிந்து கொள்ள முடியும்.

"Farmers app" can provides agricultural information at the fingertips. 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.