Skip to main content

விராட் கோலி புதிய சாதனை !!!

விராட் கோலி புதிய சாதனை !!!

புதன் கிழமை இன்று நடைபெறும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ஒரு நாள் போட்டிகளில் உலகின் மிக வேகமாக 10,000 ரன்களை எடுத்த வீரர் எனும் சர்வதேச சாதனையை விராட் கோலி புரிந்தார்.

205 இன்னிங்சில் 10,000ரன்கள் எடுத்துள்ளார் விராட். இந்த சாதனை முந்தைய சச்சினின் சாதனையான‌ 259 இன்னிங்ஸ்களில் 10,000 ரன்களை முறியடித்தது.

இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில்,  81 ரன்களை எட்டியபோது விராத் கோலி இந்த மைல்கல்லை அடைந்தார்.

மேற்கிந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆஷெல்லி நர்ஸ் பந்து வீச்சில், ஒரு ஓட்டத்தை எடுத்து இந்த நீண்ட மைல்கல்லை எட்டியுள்ளார். 

இதற்கு முன்பாக 2001 ல் இந்தூர் நகரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான, ஒருநாள் சர்வதேச போட்டியில் 10,000 புள்ளிகளைக் கைப்பற்றி சச்சின் டெண்டுல்கர் சாதனை புரிந்தார்.

பன்னிரண்டு பேட்ஸ்மேன்கள் 10,000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.18,426 ரன்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும். குமார் சங்கக்கார 14,234 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்திலும். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு நடப்ப வீரர் தோனி, இந்த ஆண்டின் துவக்கத்தில் லார்ட்ஸில் இங்கிலாந்திற்கு எதிரான மைல்கல்லை கடந்தார்.

Kohli becomes the fastest to score 10,000 ODI runs

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.