Skip to main content

விஜயகாந்த்துக்கு இந்த நிலையா? ‍- ஏலத்திற்கு வந்த சொத்துக்கள் ‍!

premalatha vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சொத்துக்கள் ஏலம் போகாமல் பாதுகாப்போம், கடன் பிரச்னையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக கட்சி பணிகளை நிர்வாகம் செய்வதற்கு கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த்துக்கு கூடுதல் பணம் தேவைப்பட்டது. இந்த நிலையில் அவரது உடல்நலமும் பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

இத்தகைய செலவுகள் காரணமாக அவர் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

vijayakanth

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மவுண்ட்ரோடு கிளையில் அவர் கடன் வாங்கி உள்ளார். மதுராந்தகம் தாலுக்காவில் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி நிலத்தை வங்கியில் அடகு வைத்து அவர் கடன் பெற்றார்.

வாங்கிய கடனை திரும்பி செலுத்தாததால் விஜயகாந்த்தின் கல்லூரி மற்றும் வீடுகள் ஏலம் விடப்படும் என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நாளிதழில் வெளியிட்டது. 

இது தேமுதிக வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், "கேப்டனின் சொத்துக்கள் ஏலம் போகாமல் பாதுகாப்போம், கடன் பிரச்னையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்" என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Vijayakanth's house, college properties to be auctioned

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.