Skip to main content

விஜய் டிவியில் ஜூன் 23 முதல் கமல் தொகுத்து வழங்கும் "பிக் பாஸ் 3"!!!

பிக் பாஸ் 3

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது மீண்டும் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை இரண்டு சீசன்கள் முடிந்து விட்டது.

கடந்த 2017-ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அறிமுகமானது பிக்பாஸ்.

அடுத்தது மூன்றாவது சீசன் வரும் ஜூன் 23 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கு முன் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 1, சீசன் 2, என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது.

biggboss1

இந்த இரண்டையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இது மாபெரும் வெற்றியைப் பெற்றது.

தற்போது "பிக்பாஸ் சீசன் 3" நிகழ்ச்சியின் ஷூட்டிங் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்ன போட்டி?

ஒரே வீட்டுக்குள் 100 நாட்கள் 16 போட்டியாளர்கள் தங்கியிருந்து வெளி உலக தொடர்புகளின்றி,  பிக்பாஸ் கொடுக்கும் போட்டிகளை செய்ய வேண்டும். இதற்கு சில விதிமுறைகளும் விதிக்கப்படும்.

கடந்த 2017-ம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஓவியா, சினேகன் உள்ளிட்டோர் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றனர்.

 "பிக் பாஸ் - 3"!

இதையடுத்து 2018-ம் ஆண்டில் இரண்டாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கியிருந்தார்.

ஆனால், நடிகர் கமல்ஹாசன் அரசியல்வாதியாக மாறி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். யாஷிகா, ஐஸ்வர்யா, மஹத் என இளசுகள் பட்டாளங்கள் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் நடிகை ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இருப்பினும் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் சீசனுக்கு கிடைக்கவில்லை. 

இந்த 3 வது சீசனுக்கான விளம்பரங்கள், ப்ரோமோ வீடியோக்கள் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பட்டு வருகிறது.

​    biggboss2

இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கும் பிரபலங்கள் குறித்து பல வதந்திகள் வந்த போதும், உண்மையான போட்டியாளர்கள் குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

BiggBoss Tamil Season 3 to Start From June 23 - Officially Announced

 

 "பிக் பாஸ் - 3"!
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.