Skip to main content

வீட்டின் பூஜை அறையில் இப்படித்தான் வழிப்பட வேண்டும் - சில வழிமுறைகள்!

வீட்டில் பூஜை அறையில் இப்படித்தான் வழிப்பட வேண்டும்!

வீட்டில் பூஜை அறையில் தெய்வப்படங்களுடன் மறைந்த மூதாதையர் படங்களைச் சேர்க்காமல், தனியாக வைத்து வணங்கினால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.

சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக்கூடாது.

சூத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் தினமும் காலையில் கேட்பது நல்லது.

நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாறே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.

யாரவது தூங்கிக்கொண்டிருக்கும் போது காலை, மாலை வேளைகளில் வீட்டில் விளக்கேற்றக்கூடாது.

பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்துப் பூசக்கூடாது, தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசவேண்டும்.

பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும், இடதுநாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் வைத்து கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபம் உண்டாகும்.

விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

வீட்டில் பூஜை அறையில் இப்படித்தான் வழிப்பட வேண்டும்!

ஈர ஆடையுடன் வழிபட நேருமானால், ஈர உடையை "ஓம் அஸ்த்ராய பட்" என்று 7 முறை கூறி உதறி உடுத்தலாம்.

தினமும் காலையில் மட்டுமே சுப்ரபாதம் கேட்க வேண்டும், அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது உசிதமானது அல்ல.

பகவானின் மந்திரத்தை சொல்லி வணங்குபவர்களுக்கு எல்லாமே வெற்றி தான், காலையில் கண் விழித்தவுடன் நாராயணனையும், இரவு தூங்கும் முன் சிவபெருமாளையும் நினைக்க வேண்டும்.

கஷ்டங்கள் நீங்க, நினைத்தது நடக்க, எளிய வழி தீபம் ஏற்றுவதுதான். தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அனுக்கிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமா அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.

தீபத்தில் உள்ள எண்ணெய்தான் எரிய வேண்டுமே தவிர, திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

விளக்கை ஏற்றும் போது, வீட்டில் பின்வாசல் இருந்தால் அதன் கதவை சாத்திவிட வேண்டும்.

காலையில் நின்றுகொண்டு செய்யும் பிராத்தனையால் இரவில் செய்த பாவமும், மாலையில் அமர்ந்து செய்யும் பிராத்தனையால் பகலில் செய்த பாவமும் நீங்கும்.

விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது கைவிரலால் எண்ணெயிலுள்ள தூசியை எடுப்பதோ, திரியை தூண்டுவதோ கூடாது.

Correct way that should be followed while praying

pray

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.