Skip to main content

"வெற்றிக்கு ஆஸ்திரேலியா தகுதியான அணி" - கோலி

australia deserves the sucess

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 
35 ரன்கள் விதியசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி தொடரை 2-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணிக்கு தாரைவார்த்தது. இந்த தொடரில் 2 சதம், 2 அரைசதத்துடன் மொத்தம் 383 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்த ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது இரண்டையும் தட்டிச் சென்றார்.

"வெற்றிக்கு ஆஸ்திரேலியா தகுதியான அணி" - கோலி

"இந்த தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், "இது எட்டக்கூடிய இலக்கு என்று உறுதியாக நினைத்தோம்.

ஆனால் கடைசியில் அவர்கள் வெற்றிவாய்ப்பை பறித்து விட்டனர். கடைசி கட்டத்தில் நாங்கள் 15 முதல் 20 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்து விட்டோம்.

ஒன்று அல்லது 2 ஓவர்கள் தான் ஆட்டத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது.

australia

இந்த தொடரை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணியினர் வெற்றி வேட்கை, உத்வேகம், சாதிக்கும் முனைப்புடன் ஆடினர்.

நெருக்கடிமான தருணத்தில் தைரியமாக செயல்பட்டனர். இந்த வெற்றிக்கும், தொடரை கைப்பற்றுவதற்கும் அவர்கள் தகுதியான அணி தான்.

ஒரு வகையில் இது போன்ற தோல்விகள் நல்லது தான். உலக கோப்பைக்கு முன்பாக தவறுகளை சரி செய்து கொள்வதற்கு இது உதவும்" என்றார்.

Australia Deserve this sucess - Indian Captain Kohli.

australa deseves this sucess

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.