Skip to main content

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதில்லை - டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டிடிவி தினகரன் அறிவிப்பு. 

மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க தேவை இருக்காது என விருத்தாசலத்தில் தினகரன் பேட்டி அளித்துள்ளார்.

17 வது மக்களவை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள துரைமுருகனின் வீடு, அவரது மகன் கதிர் ஆனந்த் நடத்தும் பள்ளி, கல்லூரி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். 

snipping tool

இந்த சோதனையின்போது, கதிர் ஆனந்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் இருந்து சுமார் ரூ.10 கோடிக்கு மேல் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. அதை ஏற்று, வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் வேலூர் மக்களவை தொகுதியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9 ந் தேதி நடைபெறும்.

இந்நிலையில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

AMMK Will not Contest in Vellore Loksabha Election - TTV Dhinakaran

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.