Skip to main content

வேலூர் மக்களவை தொகுதியை தவிர்த்து தமிழகத்தில் 72% வாக்குகள் பதிவு !

வேலூர் தவிர்த்து தமிழகத்தில் 72% வாக்குகள் பதிவு !

நேற்று ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39  தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் காலியாக இருக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 72 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

2019 மக்களவை தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 66 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. 

தமிழகத்தில் சட்ட ஒழுங்கில் எந்த பாதிப்பும் ஏற்படாததால், வாக்குப்பதிவு சுமூகமாக நடந்தது. 38 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது. 

இந்திய அளவில் மொத்தமாக 11 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் உள்ள 95 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. தேர்தலுக்கான முடிவுகள் மே மாதம் 23 ஆம் தேதி அறிவிக்கப்படும். 

18 இடங்களுக்கான சட்டசபை இடைத் தேர்தலின் முடிவைப் பொறுத்துதான் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அரசு இருக்குமா கவிழுமா என்பது முடிவாகும். 

வேலூர் தவிர்த்து தமிழகத்தில் 72% வாக்குகள் பதிவு !

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நடத்தப்பட்ட அதிரடி ரெய்டில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்று தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூரில் வாக்குப்பதிவு ரத்து!

வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைத்தது தொடர்பாக வேலூரில் நாடாளுமன்றத் தேர்தலை நிறுத்தி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இருப்பினும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 4 இடங்களில் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம், வாணியம்பாடி பகுதிகளில் விடுமுறை ரத்து செய்யப்பட்டது.

Loksabha Election 2019: Tamilnadu election status

th

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.