Skip to main content

வேலூர் மக்களவை தொகுதி: ஆகஸ்ட் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு!

Vellore Loksabha Election

17 வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி துவங்கி மே 19 ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்று முடிந்தது.

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 

அப்போது அவருக்கு நெருங்கிய நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் புத்தம் புதிய பணம் கட்டுக்கட்டாக, பெட்டி பெட்டியாக கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டது. 
 
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்த தலைமை தேர்தல் ஆணையம், வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தது. 

duraimurugan

வேலூர் பாராளுமன்ற தொகுதி

இந்நிலையில், வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று ஜூலை 4 ஆம் தேதி அறிவித்துள்ளது. 

முக்கிய நாட்கள்:

வேட்பு மனுக்களை ஜூலை 11-ம் தேதி முதல் தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி தேதி - ஜூலை 18.
ஜூலை 19-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெற ஜூலை 22 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

அதன்பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். 

ஆகஸ்ட் 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரங்களுடன், ஒப்புகைச் சீட்டு வழங்கும் விவிபாட் எந்திரங்களும் பயன்படுத்தப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. 

Vellore Loksabha Election date anounced by election Commission - August 5

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.