Skip to main content

வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்ய வேண்டும் - கமல்!

kamal

கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

வேலூரில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன், மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அந்த தொகுதியில் உள்ள வாக்களர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் உள்ளிட்ட பரிசுபொருட்கள் துரைமுருகன் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. 

duraimurugan

அதன் அடிப்படையில், வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் துரைமுருகன் வீடு, அலுவலகம், அவருக்கு சொந்தமான கல்லூரி உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இதேபோல், துரைமுருகன் உறவினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது துரைமுருகன் உறவினர் வீட்டில் 200 ரூபாய் நோட்டுகள் கொண்ட கட்டகட்டாக பணம் மூட்டை மூட்டையாக சிக்கியது. அதில், ஒவ்வொரு கட்டிலும் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு தெரு பெயர், விலாசம் உள்ளிட்ட குறிப்புகளும் அடங்கியிருந்தது.

duraimurugan

இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தொற்றுநோய் போல பரவியுள்ள பணம் கொடுக்கும் வழக்கத்தை தடுக்க வேண்டியது நமது கடமை, ஓட்டுக்கு என் கட்சியினர் பணம் கொடுத்தாலும் காட்டிக்கொடுப்பேன். பணம் கொடுத்து வாக்கு கேட்பது அவமானம். கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

Postpone Loksabha Election IN Vellore - Kamalahassan

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.