Skip to main content

வெளிநாட்டு பயணத்தின் போது ஏற்படும் பிரச்சனைகள் - இனி கவலை வேண்டாம்!!!

வெளிநாட்டு பயணத்தின் போது ஏற்படும் பிரச்சனைகள் - இனி கவலை வேண்டாம்!!!

வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் போது ஒரு நாட்டின் நேர மண்டலத்திலிருந்து (Time Zone) மற்றொரு நேர மண்டலத்தை அடையும்போது, வயிற்று பிரச்னை, தலைவலி, வாந்தி, மயக்கம் போன்றவைகள் ஏற்படுவதுண்டு. இதனால் உங்களது அவசர பிஸினஸ் ட்ரிப், கனவு சுற்றுலா ஆகியவை அதிகமாக பாதிக்கப்படும்.

தூக்கமின்மை மற்றும் சரியாக தூங்கதவர்கள் தான் இதில் பெரும்பாலும் பாதிக்கப் படுவதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இதைப்பற்றி "ஃபேட்டிக் இன் ஏவியேஸன் - கைடு டூ ஸ்டேயிங் அவேக் அட் த ஸ்டிக்" (Fatigue in Aviation: A Guide to Staying Awake at the Stick) என்ற புத்தகம் உள்ளது.

"ஒரு நேர மண்டலத்திலிருந்து மற்றொரு நேர மண்டலத்தை நமது உடல்கள் ஏற்றுக் கொள்ளும். ஆனால் ஒரே நாளில் இரண்டுக்கும் மேற்பட்ட வித்தியாசமானநேர மண்டலத்தை நாம் கடக்கும் போது, அது தான் உடலை பாதிக்கிறது. தற்போது மக்கள் நியூயார்க்கிலிருந்து பாரீஸுக்கு 9,10 மணி நேரங்களில் பறந்து விட முடியும். ஆனால் 1923-களில் கடல் வழி பயணத்தின் போது ஐரோப்பாவை அடைய 6 நாட்களாகும். அதனால் ஓரிடத்திலிருந்து மற்றொரு நேர மண்டலத்தை அடையும் போது, மன ரீதியாக முதலில் அதை நாம் அட்ஜஸ்ட் செய்துக் கொள்ள வேண்டும்" என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நீங்கள் எப்போதும் தூங்கும் நேரத்தை, அப்போதைய நேர மண்டலத்துடன் இணையுங்கள். உங்கள் உடல் இயல்பாக நாள் ஒன்றுக்கு ஒரு நேர மண்டல மாற்றத்தை சரிசெய்யும், அதன் மூலம் எளிதாக தூக்கத்தை 'அடாப்ட்' செய்துக் கொள்ளும்.

குடும்ப நல மருத்துவத்தின் பேராசிரியர் ரணித் மிஷோரி, அடிக்கடி ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்பவர். சென்று வந்ததும் 2 - 5 நாட்களுக்கு தனது தூக்க நேரத்தை உள்ளூர் நேரத்துக்கு ஏற்றவாறு முன்கூட்டியே அட்ஜஸ்ட் செய்துக் கொள்வாராம்.

"மெலடோனின் ஹார்மோன் மற்றும் மாலை நேர பிரகாசமான ஒளி தவிர்ப்பது நமது உயிரியல் கடிகாரத்தை மாற்றும்.

இதேபோல், எழுந்த பிறகு பிரகாசமான ஒளி நம் மீது படுமாறு செய்வது, புதிய நேர மண்டலத்திற்கு ஏற்ப நமது உயிரியல் கடிகாரத்தை மேம்படுத்தும்.

ஆன்லைன் நேர கால்குலேட்டரான Jetlagrooster.com  உதவியாக இருக்கும். இது உங்களுக்கு ஒரு விரிவான தீர்வைத் தரும்.

நம் உடலில் சுரக்கக் கூடிய மெலடோனின் ஹார்மோன் தான் நமக்கு தூக்கத்தை வரவழைக்கிறது. நேர மண்டலம் மாறும் பட்சத்தில், சிறிய டோசேஜ் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.

விமானத்தில் நீங்கள் குடித்த ஒயின் கூட உங்களது தூக்கத்தைக் கெடுக்கலாம். உயரத்தில் பறக்கும் போது சுவாச பிரச்னைகளுடன் கண்ணின் இயக்கங்களும் மாறுபடும்.

அதனால் ஒயினை தவிர்த்து, அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார் ஏவியேஷன் மெடிசின் அட்வைஸரியின் சி.ஈ.ஓ, க்வாய் ஸ்னைடர்.

எல்லாவற்றையும் நீங்களே முயற்சி செய்துக் கொண்டிருக்காமல், இந்த ஜெட்லாக் பிரச்னையிலிருந்து வெளிவர மருத்துவரை அணுகுங்கள்.

முதல் வாரம் தான் இந்த சிரமம் எல்லாம், பிறகு அந்த நேர மண்டலத்திற்கேற்றவாறு உடல் பழகிவிடும்.

அதனால் உங்களது விடுமுறை நாட்களை சற்று அதிகரித்து வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளுங்கள்.

An idea to overcome the time zone problems during foreign trips.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.