Skip to main content

வசூல் சாதனை !!! அவெஞ்சர் இன்பினிட்டி வார்

avenger

தமிழகத்தில் எப்போதும் ஹாலிவுட் படங்களுக்கு செம்ம வரவேற்பு இருக்கும். அதிலும் மார்வல் காமிக்ஸ் படங்களுக்கு பிரமாண்ட வரவேற்பு இருப்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் அவெஞ்சர்ஸ் படத்தின் மூன்றாம் பாகமாக அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது.

உலக சினிமா ரசிகர்களே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த படம் Avengers Infinity War. இப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்து பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை உடைத்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது இப்படம் நேற்று வரை 750 மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ 180 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இப்படம் தமிழகத்தில் மட்டுமே முதல் 3 நாட்களில் ரூ 13 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள் கூட்டமும் வரத்தொடங்கியுள்ளது.

எப்படியும் இந்த படம் தமிழகத்தில் ரூ 25 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்திய மதிப்பில் உலகம் முழுவதும் Avengers Infinity War ரூ 1000 கோடி வசூலை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.