Skip to main content

வாட்சப் மூலம் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சி - ‍தீர்வு என்ன?

WHATSAPP HACKERS

வாட்சப் செயலி மூலம் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சி செய்வதாக அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே வாட்சப் பயனர்கள் அனைவரும் உடனடியாக செயலியை அப்டேட் செய்யுமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

உலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்சப் செயலியும் ஒன்று. காணொளி, புகைப்படம், கோப்புகள் என பல முக்கிய தகவல்கள் இந்த செயலி மூலம் பகிரப்படுகிறது.

எனவே இந்த செயலியின் பாதுகாப்பு அம்சங்களில் வாட்சப் நிறுவனம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

whatsapp

அதன் அடிப்படையில் அவ்வப்போது புதுப்பிப்புகள் விடப்பட்டு செயலியின் பாதுகாப்பு அம்சம் அதிகரிக்கப்படுகிறது.

இந்நிலையில் வாட்சப்பில் ஹேக்கர்கள்  ஊடுருவ முயன்றதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

சில பயனர்களை மட்டும் குறிவைத்து திறன்பெற்ற ஹேக்கர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக வாட்சப் தெரிவித்துள்ளது.

ஹேக் செய்யப்படவேண்டிய பயனர்களுக்கு ஹேக்கர்கள் வாட்சப் அழைப்பு கொடுக்கிறார்கள்.

whatsapp

அதன் மூலம் செயலியை கண்காணிக்கும் மென்பொருள் குறிப்பிட்ட செல்போனில் தானாகவே இன்ஸ்டால் செய்யப்படுகிறது.

அதன்பின் அந்த செல்போன் ஹேக் செய்யப்பட்டு ஹேக்கர்களின் தொடர் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்களது பயனர்கள் அனைவரையும் உடனடியாக வாட்சப் செயலியை அப்டேட் செய்ய கோரிக்கை விடுத்துள்ளது அந்நிறுவனம். தற்போது வந்துள்ள புதிய அப்டேட்டில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளதால் பயனர்கள் அதை அப்டேட் செய்ய வாட்சப் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

WhatsApp Urges Users to Upgrade After Discovering Spyware Vulnerability

whatsapp hackers

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.