Skip to main content

வாக்குப்பதிவை அதிகரிக்க தமிழகத்தில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு!

voting

2019 ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதில் 40 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆனால் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 18-ம் தேதி, மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது.

வருடந்தோறும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் திருவிழா நடைபெறும்.

இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால், அன்றைய தினம் வாக்களிப்பதற்கு சிரமம் ஏற்படும்.

எனவே வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.

madurai

இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், வாக்குப்பதிவு நேரத்தை நீட்டித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று (March 18) செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது,

"மதுரையில் சித்திரை திருவிழா அன்று வாக்குப்பதிவு நடப்பதால், மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

எனவே மதுரை தொகுதியில் காலை 7 மணிக்குத் தொடங்கி, இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

மதுரை தவிர மற்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குப் பதில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.

TamilNadu to get extra one hour of polling to increase the polling rate and Madurai to get extra 2 hours on account of Chithirai Festival.

election

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.