Skip to main content

"வாக்குப்பதிவை அதிகரிக்க" ராகுல் காந்தி முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரிடமும் பிரதமர் வேண்டுகோள்

modi tweet

நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது எனவும், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் என இரண்டுமே ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

modi tweet

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில், வாக்குப்பதிவை அதிகரிக்க மக்களை ஊக்கப்படுத்துங்கள் என எதிர்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

modi tweet

இந்நிலையில், வாக்குப்பதிவை அதிகரிக்க மக்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சரத் பவார், மாயாவதி, அகிலேஷ் யாதவ், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு டிவிட்டரில் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

modi tweet

இதைத்தொடர்ந்து தனது அடுத்த பதிவில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கர்நாடகா முதல்வர் குமாரசாமி, உள்ளிட்டோருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

modi tweet

இதேபோல், சினிமா பிரபலங்களான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் மற்றும் விளையாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரையும் குறிப்பிட்டுள்ளார்.

PM Narendra Modi soughts opposite parties and celebrities help to increase the voting percentage in upcoming loksabha polls.

modi tweet

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.