Skip to main content

வைகை புயல் வடிவேல் நடிக்கும் "பேய் மாமா"

pei mama

நகைச்சுவை நடிகர் வடிவேலு கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான எலி படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படத்துக்குப் பிறகு விஷாலின் கத்தி சண்ட, சிவலிங்கா, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையே சிம்புதேவன் இயக்கும் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க இருந்தார் வடிவேலு. இதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டது. ஆனால் சில பிரச்னைகள் காரணமாக வடிவேலு படத்தில் நடித்துக் கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில் நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க வேண்டும் அல்லது படத்துக்காக செலவழித்த தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கூறியது.

pei mama

இதை முதலில் மறுத்த வடிவேலு, பிறகு நடிக்க சம்மதித்ததாகவும் கூறப்பட்டது.

இந்தப் படத்துக்கு செலவழித்த தொகையை திருப்பி கொடுக்கவேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கூறியதற்கு வடிவேலு தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

அதனால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிரச்னையை முடிக்கும் வரை வடிவேலுவை வைத்து எந்த ஒரு தயாரிப்பாளரும் படம் எடுக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியது. இதனால் அவர் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

இந்தநிலையில் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படத்துக்கு "பேய்மாமா" என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்தப் படம் ஹாரர் காமெடி ஜானரில் உருவாக இருப்பதாகவும் சமூகவலைதளங்களில் வெளியான போஸ்டர் மூலம் தெரிய வருகிறது. இதுபற்றி படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

முன்னதாக சக்தி சிதம்பரம் இயக்கிய கோவை பிரதர்ஸ், இங்கிலீஷ்காரன் படங்களில் வடிவேலு நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Is the comedy legend Vadivelu back with 'Pei Mama' movie? A 'first look' doing the rounds on social media!

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.