Skip to main content

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - மதுரையில் களைகட்டிய சித்திரை திருவிழா!

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

மதுரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கியதை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஆண்டுதோறும் மதுரையில் உலகப் புகழ்பெற்ற திருவிழாவாக அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் அந்த திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த திருவிழா, ஒவ்வொரு கட்டத்திலும் பக்தர் வெள்ளத்தில் நடந்தேறியது. 

மதுரையில் 8 மணிவரை வாக்குப்பதிவு:

கடந்த 17 ஆம் தேதி முக்கிய நிகழ்வுகளும் ஒன்றான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தேர்தல் நாளான நேற்று ஏப்ரல் 18 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.

marriage

தேர்தலும் தேரோட்டமும் ஒரே நாளில் நடைபெற்றதால் வாக்குப்பதிவு பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. எனவே மதுரையில் மட்டும் மக்கள் வாக்களிக்க கூடுதலாக இரண்டு மணி நேரம் வழங்கப்பட்டது.

அதனால் அங்கு வாக்குப்பதிவும் சீராக நடைபெற்று, சென்னையை விட மூன்று சதவீதம் அதிகமாக வாக்குகள் பதிவானது.

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

இந்நிலையில் இன்று திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதிகாலை 6 மணியளவில் பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு வைகை கரை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். இதனை அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான, அதாவது சுமார் 10 லட்சம் பக்தர்கள் கண்டுகளித்தனர். தமிழகம் முழுவதிலும் இருந்து குவிந்த பக்தர்களால் மதுரை திருவிழாக்கோலம் கொண்டு திகழ்ந்தது.

Lord Kallazhagar descends into river Vaigai' as part of Chithirai Brahmotsavam.

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.