Skip to main content

உடல்நலம் காக்க மாடித்தோட்டத்தில் விளைந்த காய்கறிகள்

மாடித்தோட்டம்

இன்றைய சூழலில் அனைத்து காய்கறிகளிலுமே ரசாயனப் பொருட்கள் கலந்துள்ளன. ஆகவே, வீட்டு சமையலுக்குத் தேவையான காய்கறிகளை இயற்கை முறையில் விளைவித்து சாப்பிடுவது உடல்நலத்திற்கு ஏற்றது.

பணத்தைக் கொடுத்து கொடிய நஞ்சுள்ள காய்கறிகளை வாங்குவதற்கு பதிலாக நம் வீட்டிலேயே விளைவிக்கக்கூடிய காய்கறிகளான தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய் போன்ற காய்கறிகளையும், பல்வேறு கீரை வகைகளையும் இயற்கை முறையில் உண்ணலாம். மேலும், அறிய வகைச் செடிகளான முள்ளு, சீத்தாப்பழம், மகிழம், வில்வம், கொய்யா போன்ற செடிகளையும் வளர்க்கலாம்.

மாடித்தோட்டத்தில் முக்கிய பிரச்சினை, மண் இறுகி போவது. நாம் என்ன தான் மணலையும், செம்மண்ணையும் கலந்து, தேவையான அளவு உரம், இலை மக்கு எல்லாம் போட்டு கலந்து எடுத்தாலும், நீர் ஊற்ற ஊற்ற மெதுவாக மண் இறுகி போகிறது. ரோஸ் மாதிரி செடிகள் தாக்கு பிடித்து விடுகின்றன. ஆனால் கீரை, காய்கறி செடிகள் திணற ஆரம்பிக்கிறது. மேலும், காற்றின் வேகமும் மேலே அதிகமாக இருப்பதால் இலைகள் வேகமாய் வறட்சி ஆகி வளர்ச்சி சரியாய் இருப்பதில்லை.

மாடித்தோட்டம் பொதுவாய் ஒரு பசுமை குடில் போல அமைத்து உருவாக்குகிறார்கள். முதல் மாடியில் தோட்டம் அமைக்க இது போன்ற அமைப்பு தேவை இல்லை. ரொம்ப உயரம் போகும் போது வெயிலின் தாக்கமும், காற்றின் வேகமும் அதிகமாய் இருக்கும் போது கட்டாயம் இந்த பசுமை குடில் அமைப்பது தேவையாக உள்ளது.

மாடித்தோட்டத்தில் இயற்கை சூழலில் விளைந்த பச்சைப் பசுமை காய்கறிகளை உண்ணுவதன் மூலம் ரசாயனங்களின் இருந்து விடுபட்டு நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்.

Making Upstairs Garden in homes and eat those vegetables lead to a long healthy life. 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.