Skip to main content

உடல் சூட்டை தணிக்க சில வழிமுறைகள்!!!

உடல் சூட்டை தணிக்க சில வழிமுறைகள்!!!

வெள்ளரிக்காய் அல்லது வெள்ளரிப்பிஞ்சு பச்சையாக அப்படியே சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.

காலிபிளவர் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் சூடு தணியும். முந்திரிப்பழத்தை சாப்பிட்டு வந்தாலும் உடல் சூடு தணியும்.

நாட்டு வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்டால் உடல்சூடு தணியும். முள்ளிக்கீரையை சிறிது துவரம் பருப்புடன் கடைந்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

to reduce body heat

பொன்னாங்கண்ணிக் கீரையை நீரில் கழுவி, மிளகு, பருப்பு சேர்த்து வேகவைத்து கடைந்து, சிறிது நெய் விட்டு சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.

மணத்தக்காளி கீரையை சிறுபருப்புடன் கடைந்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல்சூடு தணியும்.

வாரத்தில் ஒருமுறையாவது நல்லெண்ணெய்யை தேய்த்து குளியல் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் உடல் குளிர்ச்சி அடையும். உடலில் வெப்பநிலை சமமாகும்.

to reduce body temperature

உறங்கும் போது உள்ளங்கால்களில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு உறங்கலாம். இதனால் உடலில் உள்ள அதிக வெப்பம் நீக்கப்பட்டு, உடலின் வெப்பநிலை சமமாகும்.

ஆவாரம்பூவின் பெரிய இதழ்களை எடுத்து வெயிலில் காயவைத்து பின்னர் இடித்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். காலை மாலை தேயிலைக்குப் பதிலாக இந்த பொடியை உபயோகித்துவர உடல் சூடு தணியும்.

To reduce Body Heat during summer

cucumber

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.