Skip to main content

உரிய நபர் இல்லாமல் ஆள் வைத்து ரேஷன் வாங்கினால் - ‍ரேஷன் அட்டை ரத்து!

ரேஷன் அட்டை ரத்து!

ரேஷன் முறைகேடுகளை தடுக்க, "ஆதார்" எண் அடிப்படையில், "ஸ்மார்ட் கார்டு" வழங்கப்பட்டது. இருப்பினும், தவறுகள் முழுவதுமாக குறையவில்லை.இதற்கு, வசதியானவர்கள், பொருட்களை வாங்காமல், அடுத்தவர்களிடம் வாங்கி கொள்ளுபடி கூறுவதே முக்கிய காரணம்.

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை இலவசமாகவும். சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவை மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன.மொத்தம் உள்ள 2.03 கோடி ரேஷன் அட்டைதாரர்களில், எந்த பொருளும் வாங்காத, 50 ஆயிரம் பேர் தவிர, மற்றவர்களுக்கு, மேற்கண்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக தமிழக அரசு, ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் செலவு செய்கிறது. 

ration shops

வசதி படைத்தவர்கள் ரேஷனில் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில்லை என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அடுத்தவர் ரேஷன் அட்டையை பயன்படுத்தி கிடைக்கும் உபரி பொருட்கள், மளிகை கடை, ஓட்டல்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

பொருட்கள் வாங்க விரும்பாதவர்கள் , அதை, பொது விநியோக திட்ட இணையதளம் வாயிலாக, அரசுக்கு விட்டு கொடுக்கும் வசதியும் உள்ளது. ஆனால் அதை யாரும் பயன்படுத்துவதில்லை.

கைவிரல் ரேகை பதிவு செய்து, பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.

ration

எனவே, வேறு நபர்களிடம் கார்டுகளை கொடுத்து, பொருட்களை வாங்க கூறுவோரின் ரேஷன் அட்டைகளை கண்டறிந்து, பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டு, அவை ரத்து செய்யப்பட உள்ளன.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதனால் ரேஷன் பொருட்களை தேவைப்படுவோர் மட்டுமே, வாங்கும் நிலை ஏற்படும்.

Rules To be Very Strict in Ration Shops

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.