Skip to main content

உங்கள் வாட்சப் உரையாடல்களுக்கு புத்துணர்வு அளிக்கும் 3 புதிய அம்சங்கள்!

3 new updates in whatsapp

வாட்சப் நிறுவனம் ஐஓஎஸ் (ios), ஆண்ட்ராய்டு (Android) மற்றும் வெப் பயன்பாட்டிற்கு (Web Applications) "அனிமேட்டட் ஸ்டிக்கர்" (animated Stickers) அப்டேட்டை கொண்டு வரும் முயற்சியில் இருப்பதாக WABetaInfo தகவல் தெரிவித்துள்ளது.

இன்னும் இந்த புதிய வசதி குறித்து வாட்சப் நிறுவனம் சோதனை செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸ் (Animated Stickers):

இந்த அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸ் அடுத்த சில மாதங்களில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

3 new updates in whatsapp

தற்போது நடைமுறையில் உள்ள ஜிஃப் பைல் (GIF) என்பது ஒரு சில நொடிகளில் நின்றுவிடும். ஆனால், அனிமேடட் ஸ்டிக்கர் என்பது தொடர்ந்து ப்ளே ஆகிக் கொண்டே இருக்கும்.

இதனால், இந்த ஃபைல் மக்கள் மத்தியில் பிரபலமடையும் எனப்படுகிறது. 

ஸ்டிக்கர் பேக்ஸ் மூலம் வாட்சப்பயனர்கள் இந்த அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

புதிய டூடுல் பயனர் இடைத்தளம் (New doodle user interface)

புதிய டூடுல் அம்சங்களை வாட்சப்பில் புகுத்த அதற்கான பயனர் இடைதளத்தை மேம்படுத்துவதில் வாட்சப் நிறுவனம் செயல்படுகிறது.

இந்த புதிய வசதியால் வாட்சப் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்கள் டூடுல் இடுகையில் தேவையான விருப்ப ஸ்டிக்கர்களையும், எமோஜிகளைத் தேட அனுமதிக்கும்.

3 new updates in whatsapp

குறிப்பாக, ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் உள்ள வாட்சப் செயலியில் ஏற்கனவே இந்த அம்சம் நடைமுறையில் உள்ளது, மேலும் இது இப்போது ஆண்ட்ராய்டு பதிப்பு 2.19.106 க்கான வாட்சப் பீட்டா பதிப்பில் இடம்பெற்றுள்ளது.

அதிகாரப்பூர்வ எமோஜீக்கள் (Official 3D Emojis) :

எல்லோரும் எமோஜிக்களை நேசிக்கிறார்கள். அவை பலவிதமான உணர்ச்சிகள் மற்றும் வெளிப்பாடுகளை வெளிப்படுத்த உதவுகின்றன.

அதனால் வாட்சப் தனது தளத்தில் 3D முறையீடு கொண்ட அதிகாரப்பூர்வ எமோஜிக்களை கொண்டு வேலை செய்து வருகிறது.

3 Features that will spice up your WhatsApp conversations

3 new updates in whatsapp

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.