Skip to main content

உழவர் சந்தையை ஊக்குவிக்கும் மெய்நிகர் சில்லறை வியாபாரம் !!!

உழவர் சந்தை

சென்னை: இந்தியா முழுவதும் வாழ்க்கைமுறை ஷாப்பிங் மையங்களை உருவாக்கவும், இயக்கவும் சில்லறை விற்பனை முறை செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு நேரடி வாடிக்கையாளர் சேவையை வழங்கி, நேரடி வேளாண் உற்பத்தி பொருட்களை, சென்னை மக்கள் வாங்குவதற்கான வாய்ப்பை உழவர் சந்தை மூலம் இந்த சில்லறை வியாபாரம் ஏற்பாடு செய்து வருகிறது.

ஜூன் மாத தொடக்கத்தில் மெய்நிகர் சில்லறை விற்பனை நிலையம், சென்னையில் தனது முதல் கடை ஒன்றை திறந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உழவர் சந்தையை நடத்த திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் படி ஜூன் 25 அன்று முதல் உழவர் சந்தை நடைபெற்றது.

"ஒவ்வொரு வாரமும் தனித்துவமான ஒன்றை நாங்கள் விற்க விரும்புகிறோம். கடந்த வாரம், உதாரணமாக, புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளுடன், நாங்கள் ஒரு சிறிய கடை ஒன்றை அமைத்து, அதில் திணை பொடிகள் போன்றவற்றை விற்றோம். அடுத்து வரவிருக்கும் சந்தைகளில் ரசாயனம் கலக்காத பழங்கள் மற்றும் காய்கறிகள், வீட்டில் செய்யப்பட்ட ஜாம்கள் ஆகிய பொருட்களை விற்க திட்டமிட்டுள்ளோம் " என மெய்நிகர் சில்லறை விற்பனை நிறுவன, துணைத் தலைவர், ஜெர்மினா மேனன் கூறினார்.

"இந்த புதிய முறை சமூகத்துடன் இணைக்க உதவுவதோடு, மக்கள் தங்கள் வீட்டுக்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்பளிக்கவும் உதவுகிறது" என அவர் தெரிவித்தார்.

சென்னை, அண்ணா நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு சாலையில் அமைக்கப்பட்டுள்ள, மெய்நிகர் விற்பனையகம் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.

Virtual retail trade promotes the farmers market

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.