Skip to main content

உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு திடீர் அறுவை சிகிச்சை!

amit shah

பா.ஜ.க. தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்றிரவு குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரின் குசும் தீரஜ்லால் மருத்துவமனையில் ஒரு சிறு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில பரிசோதனைகளுக்கு பின்னர் ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்காக அமித் ஷா உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அவரது கழுத்தில் உருவான சிசுக்கட்டியை அகற்ற சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், தற்போது அகமதாபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருக்கிறார். 

Union Home Minister Amit Shah undergoes a minor surgery

Tamil