Skip to main content

உலகம் முழுவதும் வெளியான நான்கு நாளில் 2.0 ‍- 400 கோடி வசூல் !!!

உலகம் முழுவதும் வெளியான நான்கு நாளில் 2.0 ‍- 400 கோடி வசூல் !!!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 2.0 திரைப்படம் நல்ல வசூலை உலகெங்கும் குவித்து வருகிறது.

ரஜினிகாந்தின் 2.0 ஹாலிவுட் திரைப்படமான "ஃபண்டாஸ்டிஸ்ட் பீஸ்ட்ஸ் தி க்ரிண்டெல்வால்டின் குற்றங்கள்" ஐ விட கடந்த நான்கு நாட்களில் அதிக வசூல் சாதனை பெற்றிருக்கிறது.

வெளியாகி மூன்று நாட்களுக்குள் 200 கோடி ரூபாயில் நுழைந்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து வருகிறது.

நவம்பர் 29 முதல் டிசம்பர் 2 வரை, உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது.

உலகம் முழுவதும் வெளியிடப்பட்டிருக்கும் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஹீரோவாக ரஜினியும் வில்லன் கேரக்டரில் அக்ஷய் குமாரும் நடித்திருக்கின்றனர்.

பறவை ஆர்வலராக அக்ஷய் குமார் வருகிறார். தொழில்நுட்பங்கள் பறவையினங்களை அழிப்பதாகவும், அதற்கு பழி தீர்க்கும் வகையில் ராட்சத பறவையாக அக்ஷய் குமார் மாறுவதாகவும் கதை சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்தியில் அக்ஷய் குமாருக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் அங்கு சுமார் 40 சதவீத திரையரங்குகளில் 2.0 திரையிடப்பட்டுள்ளது.

கடந்த வியாழன் அன்று படம் திரையிடப்பட்டது. அன்றைய தினம் மட்டும் ரூ. 20.25 கோடியை படம் வசூலித்தது. 2-வது நாளான வெள்ளிக்கிழமை 18 கோடியை 2.0 அள்ளியிருக்கிறது. 2 நாட்களில் மொத்தம் ரூ. 38.25 கோடியை 2.0 வசூலித்துள்ளது.

மொத்தம் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்செலவில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் மூலமாக ரூ. 370 கோடிக்கும் அதிகமான தொகையை தயாரிப்பாளர்கள் கலெக்ஷன் செய்துள்ளனர்.

அமெரிக்காவில் அதிக வசூல் செய்துள்ள முதல் 5 தென்னிந்திய திரைப்படங்கள் 

1. பாகுபலி 2 - $20,571,695

2. பாகுபலி - $6,999,312

3. கபாலி - $4,585,808

4. 2.0- $3,588,450 (4 Days)

5. ரங்கஸ்தலம் - $3,513,450

சென்னை நகரத்தில், படம் நான்காவது முறையாக ரூ. 2 கோடிக்கு மேல் சம்பாதித்தது. இது கடந்த 4 நாட்களில் 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் 

நாள் 1 - 2.64 கோடி 

நாள் 2 - 2.13 கோடி

நாள் 3 - 2.57 கோடி

நாள் 4 - 2.75 கோடி

மொத்தம் 4 நாட்கள் மொத்தம் - 10.09 கோடி

2.0 box office collection Day 4

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.