Skip to main content

உலகக்கோப்பை ஹாக்கி போட்டி ‍: சி பிரிவில் இந்திய அணி முதலிடம்!!!

உலகக்கோப்பை ஹாக்கி போட்டி ‍: சி பிரிவில் இந்திய அணி முதலிடம்!!!

புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியாவும் பெல்ஜியமும் மோதின, பரபரப்பான இந்த ஆட்டத்தை இந்தியா 2-2 என்ற கணக்கில் ட்ரா செய்தது. 

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா அணி, சர்வதேச தரவரிசையில் 3 வது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணியுடன் நேற்று டிசம்பர் 2 ஆம் தேதி மோதியது.

சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தது.

புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி 2-2 என்ற கணக்கில் ட்ராவில் முடிவடைந்தது. 

இந்திய அணி ஆட்டத்தை நிதானமாகவே ஆரம்பித்தது. இதை பயன்படுத்திக்கொண்ட பெல்ஜியம் 8வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை பெற்றது. முதல் கால் பகுதியில் பெல்ஜியம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 

இரண்டாவது கால் பகுதியில் இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆனால் இரு அணிகளாலும் கோல் போட முடியவில்லை. முதல் பாதியில் 1-0 என்ற நிலையில் இந்தியா பின்தங்கி இருந்தது.

ஹர்மன்ப்ரித் சிங் 39 வது நிமிடத்தில் கோல் அடித்து சமநிலை பெற வைத்தார். மூன்றாவது கால் பகுதியிலேயே ஆட்டத்தின் 47 வது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங் கோல் அடிக்க 3 வது கால் பகுதியின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

கடைசி கால் பகுதியில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடின. பெல்ஜியத்தின் சைமன் ஆட்டம் முடிய சிறுது நேரம் இருக்கும் போது  கோல் அடித்து 2-2 என்று சமன் செய்தார்.

கடைசி நொடி வரை இரண்டு அணிகளும் கோல் அடிக்க போராடின. 

இந்த வார ஆரம்பத்தில் தென்னாப்பிரிக்காவை 5-0 என்று வீழ்த்தியிருந்த இந்தியா சி பிரிவில் முன்னிலை வகிக்கிறது.

மற்றொரு ஆட்டத்தில் கனடா தென் அப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

இந்த பிரிவின் இந்தியா டிசம்பர் 8 ஆம் தேதி கனடாவை சந்திக்கிறது.

India draw the match against Beljium and remains in 1 st position in group "C"

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.