Skip to main content

உலகக்கோப்பை ஹாக்கி 2018 : காலிறுதியில் நெதர்லாந்தை எதிர்கொள்ளும் இந்தியா

உலகக்கோப்பை ஹாக்கி 2018 : காலிறுதியில் நெதர்லாந்தை எதிர்கொள்ளும் இந்தியா

43 வருட கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஹாக்கி சாம்பியன் கனவை நிறைவேற்றும் முனைப்புடன் இந்தியா விளையாடி வருகிறது.  புவனேஷ்வரில் நடைபெறும் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இன்று டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் இந்தியா, நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. 

1975 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை அரையிறுதியில் ஆடியதே இந்தியாவின் சிறப்பான முன்னேற்றமாகும். நெதர்லாந்து உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவுடன் மோதிய 6 ஆட்டங்களில் ஐந்தில் வென்றுள்ளது. ஒன்று சமன் ஆகியுள்ளது.

தற்போது தரவரிசையில் நெதர்லாந்து 4 வது இடத்திலும், இந்தியா 5 வது இடத்திலும் உள்ளது. கடைசியாக இரு அணிகளும் சாம்பியன் கோப்பை போட்டியில் மோதின. அந்தப் போட்டி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. மொத்தமாக இரு அணிகளும் 105 போட்டிகளில் ஆடி 33 இல் இந்தியாவும், 48 இல் நெதர்லாந்தும் வென்றுள்ளன. 

உலகக்கோப்பை ஹாக்கி 2018 : காலிறுதியில் நெதர்லாந்தை எதிர்கொள்ளும் இந்தியா

இந்தப் போட்டி குறித்து பேசிய இந்திய கேப்டன் மன்ப்ரீத் சிங் ''முந்தைய ஆட்டங்களை பார்த்தால் நெதர்லாந்து எங்களுடன் சிறப்பான ஆடியுள்ளது. ஆனால் அவர்களுடன் சமீபகாலமாக நாங்கள் சிறப்பாக் ஆடி அவர்களுக்கு சோதனை அளித்து வருகிறோம். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதே எங்கள் நோக்கம்'' என்றார்.

முதல் சுற்று ஆட்டங்களில் இந்தியா 12 கோல் அடித்துள்ளது. 3 கோல் வாங்கியுள்ளது. நெதர்லாந்து 18 கோல் அடித்துள்ளது. 5 கோல் வாங்கியுள்ளது.

Men's Hockey World Cup 2018: India meets Netherland in its quarterfinals on december 13

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.