Skip to main content

உலகக்கோப்பை அரையிறுதி: இந்திய அணிக்கு 240 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூஸிலாந்து!!!

கிரிக்கெட்

"ரிசர்வ் டே" ஆட்டத்தில் 50 ஓவரின் முடிவில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 239 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 240 ரன்கள் எடுத்தால் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 46.1 ஓவரின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதியில் தடைபட்டது.

india vs newzealand

ரிசர்வ் டே 

இதுபோன்ற முக்கியமான போட்டிகளில் மழை குறிக்கீடு செய்து ஆட்டம் தடைபட்டால் வெற்றி தோல்வி முடிவை நிர்ணயம் செய்ய மாற்றுநாள் எனப்படும் ரிசர்வ் டே என்ற முறையை ஐசிசி அறிமுகப்படுத்தியது.

அதன் அடிப்படையில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டி மழைக்காரணமாக இன்று ஜூலை 10 ஆம் தேதி தொடரும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இந்திய நேரப்படி சரியாக 3 மணியளவில் ஆட்டம் துவங்கியது. 46.2 ஓவரில் இருந்து பந்து வீசப்பட்டது. புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா இருவரும் பந்து வீசினர். 

India Vs Newzealand Semifinals: rain stopped play

ரோஸ் டெய்லர் 74 ரன்களில் ரன் அவுட் ஆனார். டாம் லதாம் 10 ரன்களில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதேபோல் மேட் ஹென்றியும் 1 ரன் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

இந்திய அணி சார்பில் பும்ரா, சாஹல், ஹர்திக், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். புவனேஸ்வர் குமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.

India Vs Newzealand: Rain suspends play - Match Will resume on 10th July

bhuvaneshwar kumar
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.