Skip to main content

உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை - வினோத் ராய்

வினோத் ராய்

புல்வாமா தீவிரவாத தாக்குதலைக் காரணம் காட்டி, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பதற்குத் தடைவிதிக்கப்படுமா அல்லது பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் மே 30-ம் தேதி முதல் ஜூலை 16-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இதற்கிடையே கடந்த 14-ம் தேதி புல்வாமாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.

நூதனமுறை தாக்குதல் 

காஷ்மீரின் பிரதான நகரமான ஸ்ரீநகரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு சுமார் 2,500 ராணுவ வீரர்களை ஏற்றி சென்ற 70 வாகனங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. சுமார் 300 மற்றும் 350 கி.கி (660-770 லக்) வெடிகுண்டுகள் கொண்ட ஒரு கார் இந்த ரிசர்வ் படை வாகனத்தின் மீது மோதச்செய்து இந்த சம்பவத்தை தீவிரவாதிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் இந்திய நேரப்படி மதியம் 3.15 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.

ஜெய்ஷ்-ஈ-முகமது பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்பு 

இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட 
ஜெய்ஷ்-ஈ-முகமது பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பாகிஸ்தானுக்கு எதிரான கோபத்தை அதிகப்படுத்தி உள்ளது.

இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணி பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மேலும், உலககக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு தடைவிதிக்கக் கோரி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம்(ஐசிசி) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

 இது குறித்து ஆலோசனை நடத்த, பிசிசிஐ சிறப்புப் பொதுக்குழுக்கூட்டம் இன்று (February 22) டெல்லியில் நடந்தது. இதில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக அதிகாரி வினோத் ராய் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

india vs pakistan

அந்த கூட்டத்துக்கு பின் வினோத் ராய் நிருபர்களிடம் கூறியதாவது:

உலகக்கோப்பைப் போட்டியில் ஜூன் 16-ம் தேதி  நடக்கும் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுவதா? என்பது குறித்து இன்னும் நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. அந்த முடிவை மத்திய அரசிடம் பிசிசிஐ விட்டுவிட்டது. அதற்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கின்றன.

அதேசமயம், புல்மாவா தாக்குதல் குறித்து எங்களின் கவலைகளையும், தீவிரவாதத்துக்குப் பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்துவருவது குறித்த விஷயங்களையும் ஐசிசியிடம் கடிதம் மூலம் தெரிவிப்போம்.

உலகக் கோப்பைப் போட்டியின்போது வீரர்களுக்கு அதிகமான பாதுகாப்பு தேவை என்பதையும், கிரிக்கெட் விளையாடும் நாடுகள், தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுடன் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதையும் வலியுறுத்துவோம்" என்று தெரிவித்தார்.

2019 Cricket World Cup: no decision yet on India-Pakistan clash, says  Committee of Administrators

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.