Skip to main content

உலகக் கோப்பை கிரிக்கெட்: முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோல்வி!

india vs newzealand practice match

12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (2019) இங்கிலாந்தில் மே 30 ஆம் தேதி முதல் ஜூலை 14–ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இங்கிலாந்தின் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன.

லண்டனில் மே 25 ஆம் தேதி நடைபெற்ற உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணியினரின் அசத்தலான பந்து வீச்சால் ரோகித் சர்மா 2 ரன்னிலும், ஷிகர் தவான் 2 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 6 ரன்னில்லும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். தொடர்ந்து இறங்கிய கேப்டன் விராட் கோலி 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.

newzealand vs india warmup game

ஹர்திக் பாண்ட்யா 30 ரன்னும், தோனி 17 ரன்னும், தினேஷ் கார்த்திக் 4 ரன்னும் எடுத்து வெளியேறினர். இந்திய அணி 115 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது.

இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய ஆல்- ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும், குல்தீப் யாதவும் இணைந்து அணியை சற்றே உயர்த்தினர்.

இந்த ஜோடி 9 வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா அரை சதமடித்தார். அவர் 54 ரன்னிலும், குல்தீப் யாதவ் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர் இறுதியில் இந்தியா 179 ரன்னில் ஆல் அவுட்டானது.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 37.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ராஸ் டெய்லர் 71 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 67 ரன்னும் எடுத்து அசத்தினர். 

world cup warm up match india vs newzealand

நாளை மே 28 ஆம் தேதி தனது இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வங்கதேசத்தை எதிர்கொள்ளவுள்ளது.

முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஜூன் 5 ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

New Zealand defeat India by 6 wickets in ICC WC warm-up match

india vs newzealand

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.