Skip to main content

உலகக் கோப்பை 2019: 100 நாள் கவுண்டவுன் துவக்கம்!

உலகக் கோப்பை 2019: 100 நாள் கவுண்டவுன் துவக்கம்!

சர்வதேச உலக கோப்பை கிரிக்கெட் 2019 மே 30 ஆம் தேதி துவங்கி ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. நாளை பிப்ரவரி 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் 100 நாள் கவுண்டவுன் துவங்க உள்ளது. இந்த 20 வருடத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெறும் முதல் சர்வதேச உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இதுவாகும். 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் வரலாற்றில் இதுவரை மிகவும் வெற்றிகரமான அணி என்ற பெருமை ஆஸ்திரேலியாவிற்கு மட்டுமே உள்ளது, ஏனெனில் இதுவரை ஐந்து முறை உலக கோப்பை பட்டத்தை வென்றுள்ளது ஆஸ்திரேலியா, இதற்கு முன்பு இறுதியாக நடைபெற்ற 2015 ஆம் ஆண்டில் மிக சமீபத்திய உலக கோப்பை போட்டியிலும், இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.

முதல் நான்கு அணிகள் அரை இறுதியில் போட்டியிடும், அதன் பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டு வெற்றியாளர்கள் இறுதி போட்டியில் மோதுவர்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 11 இடங்களில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெறும்.

100 நாள் கவுண்டவுன் நாளை (February 19) துவங்க உள்ள நிலையில், 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்த சில தகவல்கள்!

இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணி என 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

world cup 2019

ஆப்கானிஸ்தான்

2015 ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் முதன் முறையாக கிரிக்கெட் உலகில் ஆப்கானிஸ்தான் மிகப்பெரிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது. எனினும், அவர்கள் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தகுதி போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்தியா

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா

பந்தை சேதப்படுத்தியதன் காரணமாக கடந்த ஆண்டு போட்டியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவ் மற்றும் வார்னர் இருவரும் தண்டனை காலம் முடிந்து உலக கோப்பை களத்தில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரின் பங்களிப்பு இல்லாமல் ஆஸ்திரேலிய அணி கடந்த சில போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

வங்கதேசம்

2018 ஆம் ஆண்டில் வங்கதேசம் 20 ஒருநாள் போட்டிகளில் 13 போட்டிகளில் வெற்றி பெற்றது, வெற்றிபெற்ற எண்ணிக்கையில், இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு பின்னால் இருந்தது.

இங்கிலாந்து

1975 ஆம் ஆண்டில் உலக கோப்பை நிறுவப்பட்டதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் உலகக் கோப்பை போட்டியிலும் இங்கிலாந்து அணி இடம்பெற்றுள்ளன, பல முறை இறுதி போட்டி வரை வந்துள்ள இங்கிலாந்து ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை.

நியூஸிலாந்து

நியூஸிலாந்து அணி அரை இறுதிப் போட்டிக்கு ஆறு முறையும் மற்றும் இறுதிப் போட்டிக்கு ஒரு முறையும் தகுதி பெற்றுள்ளது - 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது.

100 Days To World Cup 2019: Everything You Need To Know About The Mega Event

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.