Skip to main content

உலகை வியக்க வைத்த 2 .0 டிரெய்லர் !!

2.0

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, இந்தியாவிலேயே இதுவரை மிக அதிக பொருட்செலவில் அமைந்த திரைப்படத்தின் டிரெய்லரான ரஜினிகாந்தின் '2 .0' இன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள ’2.0’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகவுள்ள நிலையில், அதற்காக நடைபெறும் வெளியீட்டு விழாவில் ஷங்கர், ரஜினிகாந்த், ரஹ்மான் உட்பட படக்குழுவை சேர்ந்த பலர் கலந்துகொள்ளவுள்ளனர். 

2 .0 திரைப்படத்தை எஸ்.ஷங்கர் எழுதி, இயக்கியுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில், எமி ஜாக்சன், அடில் ஹுசைன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 

இத்திரைப்பட டிரெய்லரின் தொடக்கத்தில், தொலைபேசிகள் மீது அதிகமான நம்பகத்தன்மையைக் காட்டுவதன் மூலம் தொடங்குகிறது. பின்னர் தொலைபேசிகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் சார்ந்திருக்கும் தொழில்நுட்பம் உங்களைத் திசை திருப்பியிருந்தால் என்ன நடக்கும் என்பதைப் பற்றித்தான் படம் உள்ளது. எந்திரன் -1 இல் இருந்தது போலவே கணினி வரைகலை தொழில்நுட்பத்துடன் கூடிய அதிரடி காட்சிகளை எதிர்பார்க்கலாம்.

இத்திரைப்படம் அக்ஷய்குமாரின் முதல் தமிழ் அறிமுக படமாகும். மேலும் அவருடைய கதாபாத்திரம் தொலைபேசி பயன்படுத்தும் ஒவ்வொரு நபராகக் கொலை செய்வதாகும். ரஜினிகாந்த் மருத்துவர் வசீகரன், சிட்டி என இரண்டு கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்துள்ளார்.

திரையரங்கில் வெளியிடப்படும் அதேநேரத்தில் 2.0 பட டிரெய்லர், யு-டியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வெளியிடப்படும். சத்யம் சினிமாஸ் உட்பட குறிப்பிட்ட சில திரையரங்குகளில் இந்த டிரெய்லரை 3Dயில் பார்க்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் 29 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. 

Enthiran 2.0 to be an action-filled encounter trailer released today November 3

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.