Skip to main content

"உலக தலைமை பண்பாளர் விருது" பெற்றார் சுந்தர் பிச்சை!

sundar pichai

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் Nasdag தலைவர் அடெனா ஃப்ரைட்மேன், உலக தலைமை பண்பாளர் விருதுக்கு ( Global Leadership Award ) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

வாஷிங்டன் நிறுவனமான US-Indian Business Council, 2007ம் ஆண்டிலிருந்து 30 பிரிவின் கீழ் ஆண்டுதோறும் இந்த விருதை வழங்கி வருகிறது. உலக பொருளாதார முன்னேற்றத்திற்காக முயற்சிகளை மேற்கொண்ட தலைமைகளுக்கும், இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான வணிக ரீதியான தொடர்பை அதிகப்படுத்துபவர்களுக்கும் உலக தலைமை பண்பாளர் விருது வழங்கப்படுகிறது. 

இந்த விருதுகள் ஜூன் 12 ஆம் தேதி வழங்கப்பட்டது.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான உலக தலைமை பண்பாளர் விருதிற்கு இந்தியாவை சேர்ந்த சுந்தர் பிச்சை மற்றும் அமெரிக்காவை சேர்ந்த அடெனா ஃப்ரைட்மேன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் Digital economy -ஐ மட்டுமல்லாமல், பெரும்பாலான இந்தியர்கள் தொழில்நுட்பங்கள் பற்றி தெரிந்துகொள்வதற்கு சுந்தர் பிச்சை முயற்சி எடுத்துவருவது சிறப்பானது என பெருமிதம் தெரிவித்தார் US-Indian Business Council-ன் தலைவர் நிஷா பிஸ்வால். 

மேலும், இந்தியா மட்டுமல்லாது, 50 நாடுகளின் பங்குச்சந்தை வர்த்தகத்தை Nasdag தலைவர் அடெனா ஃப்ரைட்மேன் உயர்த்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பிறந்த சுந்தர் பிச்சை, உலக அளவில் சிறப்பாக செயல்பட்டு பல விருதுகளை வாங்குவது இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. 

Google CEO Sundar Pichai bags Global Leadership Award 2019

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.