Skip to main content

உலக கோப்பை 2019: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சு!

 உலக கோப்பை கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆஸ்திரேலிய அணி

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகளை தோற்கடித்தது. 3-வது லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது.

5 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கும் ஆஸ்திரேலிய அணி 10 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தனது ஆதிக்கத்தை தொடர்வதுடன், இந்த ஆட்டத்தில் வென்று அரைஇறுதியை உறுதி செய்ய தீவிரம் காட்டும்.

இங்கிலாந்து அணி

இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தியது.

2-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடமும், முந்தைய லீக் ஆட்டத்தில் இலங்கையிடமும் தோல்வியை சந்தித்தது. 

இதனால் எஞ்சிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டுள்ளது. 

தசைப்பிடிப்பு காயம் காரணமாக கடந்த 2 ஆட்டங்களில் ஆடாத தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் இந்த ஆட்டத்திலும் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது. 

ICC World Cup: England win toss, opt to bowl against Australia

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.