Skip to main content

உலக கோப்பை 2019: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இரண்டாவது வெற்றி!

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இரண்டாவது வெற்றி

லண்டன் ஓவலில் நேற்று ஜூன் 9 ஆம் தேதி நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இந்த போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இரண்டாவது வெற்றி

டாஸ் வென்ற இந்திய அணி - பேட்டிங் தேர்வு!

"டாஸ்" ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதன்படி ஷிகர் தவானும், துணை கேப்டன் ரோகித் சர்மாவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். 

இவர்கள் கூட்டணி 19-வது ஓவரில் இந்தியாவை 100 ரன்களை எட்ட வைத்தது.

செஞ்சுரி பார்ட்னர்ஷிப்:

உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடக்க விக்கெட்டுக்கு செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தந்த முதல் இந்திய ஜோடி என்ற மகிமையை பெற்ற இவர்கள் அணியின் ஸ்கோர் 127 ரன்களாக (22.3 ஓவர்) உயர்ந்த போது பிரிந்தனர்.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இரண்டாவது வெற்றி

ரோகித் சர்மா 57 ரன்னில் (70 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் விராட் கோலி ஆட வந்தார். மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய ஷிகர் தவான் 17-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

அணி மிரட்டலான ஸ்கோரை நோக்கி பயணிக்க வித்திட்ட ஷிகர் தவான் தனது பங்குக்கு 117 ரன்கள் (109 பந்து, 16 பவுண்டரி) விளாசிய நிலையில், மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. 

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இரண்டாவது வெற்றி

352 ரன்கள் இலக்கு:

அடுத்து களம் கண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். முதல் 9 ஓவர்களில் வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

அதிரடியை தொடங்கிய சமயத்தில்ஆரோன் பிஞ்ச் (36 ரன்) ரன்-அவுட் ஆனார்.

அதன் பிறகு சீரான இடைவெளியில் அந்த அணிக்கு விக்கெட்டுகள் விழுந்தன.

வார்னர் 56 ரன்னிலும் (84 பந்து, 5 பவுண்டரி), ஸ்டீவன் சுமித் 69 ரன்னிலும் (70 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினர்.

ரன்தேவை அதிகரித்து கொண்டே போனதால் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி அதிகரித்தது.

ஒரு கட்டத்தில் இந்தியா எளிதில் வெற்றி பெறும் போல் தோன்றிய போது, விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி இந்திய பவுலர்களுக்கு ‘தண்ணி’ காட்டியதால் வெற்றி தாமதம் ஆனது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இரண்டாவது வெற்றி

50 ஓவர் முழுமையாக ஆடிய ஆஸ்திரேலியா 316 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இருந்த இந்தியாவுக்கு இது 2-வது வெற்றியாகும். ஆஸ்திரேலியாவுக்கு முதல் தோல்வியாகும். ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 

இந்திய அணி சார்வில் புவனேஸ்வர் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இதன் மூலம் உலகக்கோப்பை புள்ளி பட்டியலில் இந்திய அணி 3 வது இடத்தில் உள்ளது. நியூஸிலாந்து அணி முதல் இடத்திலும், இங்கிலாந்து அணி 2 ஆம் இடத்திலும், ஆஸ்திரேலிய அணி நான்காம் இடத்திலும் உள்ளன. 

World Cup 2019: Defending champions Australia get a masterclass

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.