Skip to main content

TNPSC: ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்க ஒரு வழிகாட்டி!

#TNPSC

தமிழகத்தில் காலியாக உள்ள 6000 க்கும் மேற்பட்ட காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்று ஜூன் 14 ஆம் தேதி தொடங்கியது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) நடத்தும் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு ஜூன் 7ஆம் தேதி நாளிதழ்களில் வெளியானது.

பணிகள்:

இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) ஆகிய பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுகளை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

அந்த வகையில், வரும் செப்டம்பர் மாதம் குரூப் 4 தேர்வு நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. .

குரூப் 4 தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு பாடத்திட்டங்கள், விண்ணப்பக்கட்டணம் பற்றிய முழுமையான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகியுள்ளது. 

6,491 காலி அரசுப் பணியிடங்களை நிரப்ப இத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், பின்வரும் இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம்.

http://www.tnpsc.gov.in/

http://tnpscexams.in/

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2019 அறிவிப்பாணை (ஆங்கிலம்) 

http://www.tnpsc.gov.in/Notifications/2019_19_ccse4-notfn-eng.pdf

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2019 அறிவிப்பாணை (தமிழ்) 

http://www.tnpsc.gov.in/2019_19_ccse4-notfn-tamil.pdf

முக்கிய தேதிகள்:

வேலை வாய்ப்பு அறிவிக்கை நாள்: 7 ஜூன் 2019 

ஆன்லைன் பதிவு துவங்கும் நாள்: 14 ஜூன் 2019 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14 ஜூலை 2019 

குரூப் 4 தேர்வு நடைபெறும் நாள்: 1 செப்டம்பர் 2019 (காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை) 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150/- 

வயது வரம்பு: 21 - 40 

குறைந்தபட்ச கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு 

TNPSC Notification for Combined Civil Services Examination-IV (GROUP-IV).

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.