Skip to main content

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, சேலம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

இதர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

இந்த மழை வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த மழைக்கும் பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

indian meterological department

 

சென்னை

Subscribe to சென்னை வானிலை ஆய்வு மையம்