Skip to main content

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத விற்பனை 11% சரிவு!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், 2019 ஆம் ஆண்டிற்கான ஆகஸ்ட் மாத மொத்த விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் மொத்த விற்பனை 11 சதவீதம் சரிந்து 3,90,026 ஆக இருந்தது.

ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதத்தில் 437,092 யூனிட்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு விற்பனை

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத உள்நாட்டு விற்பனை 2,08,109 ஆக இருந்தது, இது கடந்த ஆண்டில் 2,55,631 ஆக இருந்தது, இதனால் உள்நாட்டு விற்பனை 19 சதவீதம் குறைந்துள்ளது என்று பஜாஜ் ஆட்டோ ஒழுங்குமுறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Subscribe to மோட்டார் வாகன நிறுவனங்கள்