Skip to main content

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரின் இந்திய அணி அறிவிப்பு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் இடம் பெறவில்லை, அதே நேரத்தில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் ஒரே மாற்றமாக ஹர்திக் பாண்ட்யா இடம்பெற்றுள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்று சர்வதேச டி 20 போட்டிகள்:

செப்டம்பர் 15 - தர்மசாலா,
செப்டம்பர் 18 - மொஹாலி,
செப்டம்பர் 22 - பெங்களூரு.

டெல்லியின் ஃபெரோஸ் ஷா மைதானத்திற்கு அருண் ஜெட்லியின் பெயர்!!!

ஆகஸ்ட் 24 அன்று இறந்த பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லியின் பெயரை, ஃபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்திற்கு (the Feroz Shah Kotla cricket stadium) வைக்க டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் (The Delhi & District Cricket Association (DDCA)) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

பி.வி சிந்துவிற்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்து!

2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி பி.வி.சிந்து தங்கப்பதக்கம் வென்றார்.

42 ஆண்டு கால உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் பி.வி.சிந்து.

ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பி.வி.சிந்து தங்கம் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

யுஎஸ் ஓபன்: முதல் சுற்றில் ரோஜரை கதிகலங்க வைத்த இந்திய வீரர்!

நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான இத்தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.  

இதில் உலகின் மூன்றாம் நிலை  வீரர் ரோஜர் பெடரரை இந்தியாவின் இளம் வீரர் சுமித் நாகல் எதிர்கொண்டார்.

ஆரம்பத்தில் மிகவும் உற்சாகமாக ஆடிய சுமித் நாகல், ரோஜர் பெடரருக்கு கடும் சவாலாக விளங்கினார். முதல் செட்டில் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார்.

உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர்!!!

2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி பி.வி.சிந்து தங்கப்பதக்கம் வென்றார்.

42 ஆண்டு கால உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் பி.வி.சிந்து.

ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பி.வி.சிந்து தங்கம் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: இந்தியா திணறல்!

மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் ஆன்டிகுவாவில் நேற்று தொடங்கியது. இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆட்டத்தின் முதல் நாளில் இந்தியா ஆறு விக்கெட்டுக்கு 203 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அஜிங்க்யா ரஹானே அதிகபட்சமாக 81 ரன்கள் எடுத்தார். மற்ற குறிப்பிடத்தக்க பங்களிப்பு தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுலிடம் இருந்து வந்தது. அவர் 44 ரன்கள் குவித்தார்.

36–வது வயதில் முதலிடத்தை பிடித்து ரோஜர் பெடரர் உலக சாதனை

ரோட்டர்டாம், 

குளிர்கால ஒலிம்பிக்: ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் ஜப்பான் வீராங்கனை சாதனை

பியாங்சாங், 

23–வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்களுக்கான அல்பைன் பனிச்சறுக்கின் ஜெயன்ட் ஸ்லாலோம் பிரிவில் ஆஸ்திரியா வீரர் மார்செல் ஹிர்ஸ்செர் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். பனிமலையின் உச்சியில் இருந்து மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த அவர் 2 நிமிடம் 18.04 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். அவருக்கு இது 2–வது தங்கப்பதக்கமாகும். நார்வேயின் ஹென்ரிக் கிறிஸ்டோபெர்சென் வெள்ளிப்பதக்கம் (2 நிமிடம் 19.31 வினாடி) பெற்றார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்

ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

20 ஓவர் கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்காவும் (2-1), ஒரு நாள் தொடரை இந்தியாவும் (5-1) கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நேற்று தொடங்கியது.

Subscribe to விளையாட்டு