Skip to main content

முகேஷ் அம்பானி ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம்!!!

செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், ஃபைபர் அடிப்படையிலான பிராட்பேண்ட் சேவைகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது, குறைந்தபட்ச இணைய வேகத்தை (100 mbps) 699 ரூபாய்க்கு வழங்குகிறது.

ஜியோ ஃபைபர் ஒரு மாதத்திற்கு, 8,499 ரூபாய்க்கு 1 ஜிபி வரை பிராட்பேண்ட் இணைய வேகத்தை வழங்கும் என்று ஜியோ நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் பிராட்பேண்ட் சேவை வரம்பற்ற நெட், இந்தியாவில் எங்கும் இலவச குரல் அழைப்பு மற்றும் டிவி வீடியோ அழைப்பு / குழு அழைப்பிற்கு வழிவகுக்கும்.

"எங்கள் நாட்டின் இரும்பு மனிதர் - அமித் ஷா" - அம்பானி புகழாரம்

குஜராத்தின் காந்தி நகரில் உள்ள "பண்டிட் தீனதயாள் பெட்ரோலிய பல்கலைக் கழக"த்தின் மாநாட்டு விழாவில் அமித் ஷா, முகேஷ் அம்பானி கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முகேஷ் அம்பானி,

“அமித் ஷா, நீங்கள் ஒரு உண்மையான கர்மயோகி. நீங்கள் உண்மையிலேயே எங்கள் நாட்டின் இரும்பு மனிதர். குஜராத், தற்போது இந்தியாவுக்கான உங்களைப் போல் ஒரு தலைவரை கொண்டிருப்பது பெரும்பாக்கியம்” என்று கூறியுள்ளார்.

Subscribe to முகேஷ் அம்பானி