Skip to main content

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதலிடம்!

ஜமைக்காவில் நடந்த இந்தியா - மேற்கிந்திய தீவுகள் மோதிய இரண்டாவது டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்த்து 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.

இருப்பினும் இந்திய கேப்டன் கோலி இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார்.

இதனால் அவர் சர்வதேச டெஸ்ட் தொடரில் முதல் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார், இரண்டாம் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் விராட் கோலியை முந்தி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Steve Smith: Australia batsman returns to top of Test rankings

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!

கிங்ஸ்டனில் நடந்த 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றி மூலம் கிளிஞ்ச்ஸ் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரின் இந்திய அணி அறிவிப்பு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் இடம் பெறவில்லை, அதே நேரத்தில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் ஒரே மாற்றமாக ஹர்திக் பாண்ட்யா இடம்பெற்றுள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்று சர்வதேச டி 20 போட்டிகள்:

செப்டம்பர் 15 - தர்மசாலா,
செப்டம்பர் 18 - மொஹாலி,
செப்டம்பர் 22 - பெங்களூரு.

Subscribe to இந்திய கிரிக்கெட் அணி